கால்நடைகளை கொன்று அட்டகாசம் செய்யும் சிறுத்தைப்புலியை பிடிக்க கூண்டு வைப்பு


கால்நடைகளை கொன்று அட்டகாசம் செய்யும் சிறுத்தைப்புலியை பிடிக்க கூண்டு வைப்பு
x

டி.என்.பாளையம் அருகே கால்நடைகளை கொன்று அட்டகாசம் செய்யும் சிறுத்தைப்புலியை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டு உள்ளது.

ஈரோடு

டி.என்.பாளையம் அருகே கால்நடைகளை கொன்று அட்டகாசம் செய்யும் சிறுத்தைப்புலியை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டு உள்ளது.

கால்நடைகளை...

டி.என்.பாளையம் வனச்சரகத்துக்குட்பட்ட கிராமம் கொங்கர்பாளையம். இந்த கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்து உள்ளது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வனப்பகுதியை விட்டு வெளியேறிய சிறுத்தைப்புலி ஒன்று கொங்கர்பாளையம் பகுதியை சேர்ந்த நஞ்சன் என்பவரின் ஆட்டையும், ராமசாமி என்பவரின் கன்றுக்குட்டியையும் கடித்து கொன்றது.

இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். மேலும் கால்நடைகளை கொன்று அட்டகாசம் செய்து வரும் சிறுத்தைப்புலியை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

கூண்டு வைப்பு

இதையடுத்து சம்பவம் நடந்த இடங்களுக்கு சென்ற வனத்துறையினர் அங்கு பதிவாகி இருந்த கால் தடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அது சிறுத்தைப்புலியின் கால் தடம் என்பதை உறுதி செய்தனர். இதைத்தொடர்ந்து சிறுத்தைப்புலியை பிடிக்க ராமசாமி என்பவரின் தோட்ட பகுதியில் 5 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை வனத்துறையினர் பொருத்தியிருந்தனர். இதில் தோட்ட பகுதிக்கு சிறுத்தைப்புலி வந்து சென்ற காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்ததை கண்டனர்.

இதைத்தொடர்ந்து ராமசாமி தோட்டத்துக்கு சிறுத்தைப்புலி வரும் வழித்தடத்தில் கூண்டை வைத்து உள்ளனர். மேலும் அந்த கூண்டில் இறைச்சியையும் வனத்துறையினர் வைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Related Tags :
Next Story