அக்னிபத் திட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் இளைஞர்கள் பங்கேற்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்த வேண்டும்


அக்னிபத் திட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் இளைஞர்கள் பங்கேற்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்த வேண்டும்
x

அக்னிபத் திட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க இளைஞர்கள் செல்ல வேண்டாம் என்று ராணுவம் மற்றும் போலீஸ் பயிற்சி மைய உரிமையாளர்கள், நிர்வாகிகள் அறிவுறுத்த வேண்டும் என்று வேலூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முத்துசாமி கூறினார்.

வேலூர்


அக்னிபத் திட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க இளைஞர்கள் செல்ல வேண்டாம் என்று ராணுவம் மற்றும் போலீஸ் பயிற்சி மைய உரிமையாளர்கள், நிர்வாகிகள் அறிவுறுத்த வேண்டும் என்று வேலூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முத்துசாமி கூறினார்.

அக்னிபத் திட்டம்

மத்திய அரசின் அக்னிபத் திட்டத்தில் ராணுவத்திற்கு ஆட்கள்சேர்ப்பு முறைக்கு நாடு முழுவதும் இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். வடமாநிலங்களில் ரெயில் எரிப்பு, வன்முறை உள்ளிட்ட சம்பவங்கள் நடந்து வருகிறது. தமிழகத்தில் வேலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இளைஞர்கள் அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதனால் வேலூர் மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று முன்தினம் நடந்த போராட்டத்தில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 85 பேர் கலந்து கொண்டனர்.

ஆலோசனை கூட்டம்

இது வேலூர் மாவட்ட காவல்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து இளைஞர்கள் போராட்டத்தில் பங்கேற்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் உத்தரவிட்டார்.

அதன்பேரில் வேலூர் மாவட்டத்தில் உள்ள ராணுவம் மற்றும் போலீஸ் பயிற்சி மைய உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு வேலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முத்துசாமி தலைமை தாங்கி பேசியதாவது:-

போராட்டத்துக்கு செல்ல வேண்டாம்

அக்னிபத் திட்டத்தை கைவிடும்படி தமிழக அரசு, மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளது. எனவே வடமாநில இளைஞர்களை போன்று தமிழக இளைஞர்கள் ரெயில் எரிப்பு உள்ளிட்ட வன்முறை சம்பவங்களில் ஈடுபடக்கூடாது. அனுமதி இன்றி பொது இடங்களில் இளைஞர்கள் போராட்டம், தர்ணா மற்றும் வன்முறையில் ஈடுபட்டால் அவர்கள் மீது வழக்குப்பதிவு மற்றும் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதனால் எதிர்காலத்தில் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அரசு பணி கிடைக்காமல் போய்விடும்.

எனவே உங்கள் பயிற்சி மையத்தில் படித்து வரும் இளைஞர்களிடம் இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பயிற்சி மையத்தில் பயிற்சி பெறும் இளைஞர்களின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை போலீசாரிடம் தெரிவிக்க வேண்டும். சமூக வலைதளங்களில் பரவும் பொய்யான தகவல்களை நம்பி போராட்டத்துக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்த வேண்டும். மேலும் இதுதொடர்பாக இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்பேசினார்.

கூட்டத்தில், தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன் மற்றும் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ராணுவம் மற்றும் போலீஸ் பயிற்சி மைய உரிமையாளர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

---

Image1 File Name : 11209081.jpg

----

Reporter : S. PONSINGH_Staff Reporter Location : Vellore - VELLORE


Next Story