தொழிற்பயிற்சி நிலைய காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என அலுவலர் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
தொழிற்பயிற்சி நிலைய காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என அலுவலர் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொழிற்பயிற்சி நிலைய காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என அலுவலர் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருவண்ணாமலை வேங்கிகாலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் (நகரம்) அமரேசன் வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் ரமேஷ், பொருளாளர் திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் நவநீதன், மாநில துணைத் தலைவர் நடராஜன், விழுப்புரம் மண்டல செயலாளர் தெய்வராஜா ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்தனர்.
கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே அறிவிக்க வேண்டும். தற்காலிக ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். உதவியாளர் முதல் முதல்வர் வரை உள்ள சுமார் 40 சதவீத காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்திட வேண்டும். பதவி உயர்வின் போதும், பணியிடமாறுதலின் போதும் கலந்தாய்வு முறையில் இடமாறுதல் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக திருவண்ணாமலை அரசினர் ஐ.டி.ஐ. வளாகத்தில் கிளை தலைவர் சுரேஷ் தலைமையில் முதல்வர் (பொறுப்பு) ரவி, சங்க கொடியினை ஏற்றிவைத்தார். கூட்டத்தில் கிளை செயலாளர் சரவணன், தலைமை நிலைய செயலாளர் சுப்பிரமணியன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பார்த்திபன், நெல்லை மண்டல செயலாளர் சேகர் உள்பட மாநில செயற்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.