தூத்துக்குடியில் நடைபெற இருந்தமீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒத்திவைப்பு
தூத்துக்குடியில் நடைபெற இருந்த மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்ட மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் பனிமயமாதா ஆலய தங்கத் தேரோட்டத்தை முன்னிட்டும், மீனவர்களின் கோரிக்கையை ஏற்றும், குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. அதன்படி வருகிற 11-ந் தேதி காலை 11 மணிக்கு மீனவர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் மீனவர்கள் கலந்து கொண்டு குறைகளை தெரிவிக்கலாம்.
இந்த தகவலை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story