கோத்தகிரியில் கடுங்குளிர் நிலவியது


கோத்தகிரியில் கடுங்குளிர் நிலவியது
x
தினத்தந்தி 28 Dec 2022 12:15 AM IST (Updated: 28 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரியில் கடுங்குளிர் நிலவியது.

நீலகிரி

கோத்தகிரி,

கோத்தகிரி பகுதியில் கடந்த சில நாட்களாக லேசானது முதல் மிதமான மழை தொடர்ந்து பெய்து வருகிறது. மேலும் மேகமூட்டத்துடன் கூடிய சீதோஷ்ண காலநிலை நிலவி வருகிறது. இதன் காரணமாக கடுங்குளிர் நிலவியது. மழை மற்றும் கடும் குளிரான சீதோஷ்ண காலநிலை நிலவியதால் கோத்தகிரி நகரின் முக்கிய பகுதிகள் பொதுமக்கள் வருகையின்றி வெறிச்சோடி காணப்பட்டது. குளிர் காரணமாக மார்க்கெட்டில் உள்ள காய்கறி வியாபாரிகள் தங்களது கடைக்குள் விறகுகளை கொண்டு நெருப்பு மூட்டி குளிர் காய்ந்தனர். மேலும் குளிரை போக்க கம்பளி ஆடைகளை அணிந்து இருந்தனர். கடுங்குளிர் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.


Next Story