குளத்தில் மூழ்கி ஐ.டி.ஐ. மாணவர் பலி
குளத்தில் மூழ்கி ஐ.டி.ஐ. மாணவர் பலி
பேராவூரணி
பேராவூரணி அருகே குளத்தில் மூழ்கி ஐ.டி.ஐ. மாணவர் பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐ.டி.ஐ. மாணவர்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மழையூரை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் மணிகண்டன்(வயது 21). இவர், புதுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் ஐ.டி.ஐ.யில் படித்து வந்தார்.
இவரது நண்பர் மஞ்சுநாதன்(19). புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பகுதியை சேர்ந்தவர்.
குளத்தில் மூழ்கி சாவு
நேற்று கீரமங்கலம் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் தேரோட்ட திருவிழா நடந்தது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக மஞ்சுநாதன் வீட்டிற்கு மணிகண்டன் உள்ளிட்ட 8 நண்பர்கள் வந்துள்ளனர்.
அவர்கள் அனைவரும் தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே வேம்பங்குடி-பைங்காலில் உள்ள வீரமாகாளியம்மன் கோவில் குளத்தில் குளித்தனர். இதில் மணிகண்டன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
ே்சாகம்
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பேராவூரணி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மணிகண்டன் உடலை மீட்டு பேராவூரணி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து பேராவூரணி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குளத்தில் மூழ்கி ஐ.டி.ஐ. மாணவர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.