ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்: காலம் தாழ்த்தியது கவர்னரின் பதவிக்கு அழகல்ல - டி.டி.வி தினகரன்


ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்: காலம் தாழ்த்தியது கவர்னரின் பதவிக்கு அழகல்ல - டி.டி.வி தினகரன்
x
தினத்தந்தி 28 Nov 2022 2:44 PM IST (Updated: 28 Nov 2022 2:50 PM IST)
t-max-icont-min-icon

சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தியது கவர்னரின் பதவிக்கு அழகல்ல என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை ராயப்பேட்டையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது ,

ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிரான அவசர சட்டம் காலாவதியானது துரதிர்ஷ்டவசமானது. யார் ஆட்சியில் இருந்தாலும் மக்கள் நல திட்டங்களுக்கு காலம் தாழத்தாமல் கவர்னர் உடனடியாக கையெழுத்திடுவது தான் மரபு.

கவர்னரின் செயல்களுக்கு உச்சநீதிமன்றம் ஏற்கனவே கண்டனம் தெரிவித்துள்ளது. இது போன்ற நிகழ்வுகள் வரும் காலங்களில் நடைபெறாமல் கவர்னர் செயல்பட வேண்டும். விமர்சனத்திற்கு ஆளாகாமல் செயல்படுவது தான் கவர்னருக்கு அழகாகும்.

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பிற்கு உரிய அவகாசம் அளிக்க வேண்டும். டிசம்பர் 31-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கியிருப்பது போதுமானதாக இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story