ஐ.வி.எல். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் சாதனை
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வில் ஐ.வி.எல். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் இருமத்தூர் ஐ.வி.எல். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வில் அனைத்து மாணவ-மாணவிகளும் தேர்ச்சி பெற்று 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். கார்முகிலன் என்ற மாணவன் 600-க்கு 584 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடத்தையும், மாவட்ட அளவில் சிறப்பிடத்தையும் பெற்றுள்ளார். ஹேமலதா என்ற மாணவி 582 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், மாணவி சஞ்சனாஸ்ரீ 579 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தினை பிடித்துள்ளனர்
மேலும் பள்ளியில் 551 மதிப்பெண்களுக்கு மேல் 10 மாணவர்களும், 500 முதல் 550 வரை 34 மாணவர்களும, 451 முதல் 500 வரை 55 மாணவர்களும் பெற்றுள்ளனர்.
இதேபோல் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். கனிஷ்கா என்ற மாணவி 500-க்கு 493 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், மாவட்ட அளவில் சிறப்பிடத்தையும் பெற்றுள்ளார். சுவேதா என்ற மாணவி 491 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், அனுசுயா, பரணிவேலன் ஆகிய இருவரும் 490 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தினையும் பிடித்துள்ளனர். மேலும் 490 மதிப்பெண்களுக்கு மேல் 4 மாணவர்களும், 480-க்கு மேல் 8 மாணவர்களும், 450-க்கு மேல் 33 மாணவர்களும் பெற்று பள்ளியில் தேர்வெழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்ச்சி பெற்ற மாணவர்களை பள்ளியின் தலைவர் மற்றும் தாளாளர் டி.கோவிந்தராஜ், செயலாளர் ஜெயந்தி வெங்கடேசன், நிர்வாக அலுவலர் சக்தி, முதல்வர் சண்முகவேல், துணை முதல்வர் ரகுபதி, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டினர்.