போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஜாபர் சாதிக் வீட்டிற்கு சீல் வைப்பு


போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஜாபர் சாதிக் வீட்டிற்கு சீல் வைப்பு
x

மத்திய போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் சாதிக்கின் வீட்டுக்கு சீல் வைத்தனர்.

சென்னை,

போதைப்பொருள் கடத்தலுக்கு சென்னையை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர்சாதிக் என்பவர் மூளையாக செயல்பட்டது தெரிய வந்தது. கடந்த 3 ஆண்டுகளில் அவர்கள் சுமார் ரூ.2 ஆயிரம் கோடி போதைப்பொருட்களை கடத்தி இருப்பதும் தெரியவந்தது.

தி.மு.க.வில் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்த ஜாபர் சாதிக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். இதற்கிடையே போலீசார் தேடுவதை அறிந்ததும் ஜாபர்சாதிக் தலைமறைவாகிவிட்டார். அவரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

டெல்லி போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ள சம்மனை சென்னை மயிலாப்பூரில் உள்ள ஜாபர்சாதிக் வீட்டில் ஒட்டி உள்ளனர். இதேபோல் புரசைவாக்கம் டவுட்டன் பகுதியில் உள்ள அவரது அலுவலகத்திலும் சம்மன் ஒட்டப்பட்டு உள்ளது. மேலும் ரூ.2 ஆயிரம் கோடி போதைப்பொருட்கள் கடத்தல் பின்னணியில் ஜாபர்சாதிக்குடன் தொடர்பில் உள்ளவர்கள் யார்? யார்? என்ற விபரங்களை தனிப்படை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜாபர் சாதிக்கின் சென்னை இல்லத்தில் சோதனை மேற்கொண்ட மத்திய போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் அவரது வீட்டுக்கு சீல் வைத்தனர்.


Next Story