ஜாக்டோ-ஜியோ ஆலோசனை கூட்டம்
நெல்லையில் ஜாக்டோ-ஜியோ ஆலோசனை கூட்டம் நடந்தது.
திருநெல்வேலி
நெல்லை சந்திப்பு கல்லூரி ஆசிரியர்கள் சங்க அலுவலகத்தில் நேற்று அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கான ஜாக்டோ - ஜியோ சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பால்ராஜ் தலைமை தாங்கினார். மாநில உயர்மட்ட குழு உறுப்பினர்கள் பிரம்மநாயகம், ராஜேந்திரன், பிளசிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராஜகுமார், அண்ணாத்துரை, காமராஜ், செண்பகராஜன், ரூபோஸ் சாமுவேல் உள்ளிட்டோர் பேசினார்கள்.
கூட்டத்தில் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நாளை (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Related Tags :
Next Story