சேவூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை மனு வழங்கிய ஜாக்டோ ஜியோ அமைப்பினர்
ஆரணியில் சேவூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ.விடம் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கோரிக்கை மனு வழங்கினர்.
ஆரணி
ஜாக்டோ ஜியோ அமைப்பின் முக்கிய கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர்.
சட்டசபை தேர்தலின்போது தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அரசு ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என அறிவித்து இருந்தனர்.
ஆனால் இதுவரை எந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.
இந்த நிலையில் ஜாக்டோ ஜியோ அமைப்பின் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினரிடமும் மனுக்களை வழங்கி சட்டமன்றத்தில் அழுத்தம் கொடுத்து பேச வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
அதன்படி ஆரணி பகுதியில் உள்ள ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள்ஆரணி கோட்டை மைதானம் அருகே உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் எம்.எல்.ஏவ.ிடம் கோரிக்கை மனுவை வழங்கி சட்டமன்றத்தில் எங்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என கூறினர்.