ஜக்கனாரை பாரதி அணி வெற்றி


ஜக்கனாரை பாரதி அணி வெற்றி
x

லீக் கிரிக்கெட் போட்டியில் ஜக்கனாரை பாரதி அணி வெற்றி பெற்றது.

நீலகிரி

கோத்தகிரி,

நீலகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் புதிய உறுப்பினராக பதிவு செய்து, சி டிவிஷனில் விளையாட விருப்பம் தெரிவித்த 11 அணிகளுக்கு இடையே லீக் போட்டி நடத்தப்படுகிறது. இதில் சிறப்பாக விளையாடும் 2 அணிகளை தேர்வு செய்வதற்கான போட்டிகள் கோத்தகிரி காந்தி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று ஜக்கனாரை பாரதி அணி, பிக்கட்டி அணியும் மோதியது. தலா 30 ஓவர்கள் கொண்ட போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பிக்கட்டி அணி 29.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன்கள் எடுத்தது. அந்த அணி வீரர் சுரேஷ் குமார் 42 ரன்கள் எடுத்தார். பாரதி அணியின் பந்து வீச்சாளர் சந்தோஷ் 4 விக்கெட்டுகளையும், சுரேஷ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து விளையாடிய பாரதி அணி 23.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 154 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அணி வீரர் மூர்த்தி 37 ரன்கள் எடுத்தார். மனுஷ் கவுதம் 58 ரன்கள், தீபக் 30 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர். பிக்கட்டி அணி பந்து வீச்சாளர் சரவண குமார் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.



Next Story