தொழிலாளிக்கு 8 ஆண்டு சிறை
10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 8 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிவகங்கை போக்சோ சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது.
10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 8 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிவகங்கை போக்சோ சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது.
பாலியல் தொல்லை
சிவகங்கை அடுத்த பொண்ணாகுளம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில் முருகன் (வயது 32). கூலித்தொழிலாளியான இவர் கடந்த 2017-ம் ஆண்டு சிவங்கை அருகே உள்ள ஒரு பகுதியை சேர்ந்த அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.
இது தொடர்பாக அந்த மாணவியின் தாயார் சிவகங்கை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் செந்தில் முருகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
8 ஆண்டு சிறை
இந்த வழக்கின் விசாரணை சிவகங்கையில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரணை செய்த நீதிபதி சரத்ராஜ் குற்றம் சாட்டப்பட்ட செந்தில் முருகனுக்கு 8 ஆண்டுகள் 4 மாதம் சிறை தண்டனையும், ரூ.12 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நிவாரண நிதியாக ரூ.1 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டார்.