மோசடி வழக்கில் பெண்ணுக்கு ஒரு ஆண்டு சிறை


மோசடி வழக்கில் பெண்ணுக்கு ஒரு ஆண்டு சிறை
x
தினத்தந்தி 28 April 2023 12:15 AM IST (Updated: 28 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

மோசடி வழக்கில் பெண்ணுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

மதுரை

பேரையூர்,

திருமங்கலத்தை சேர்ந்தவர் சுசி என்ற ராஜலட்சுமி (வயது 45). இவர் கடந்த 2013-ம் ஆண்டு அப்பக்கரை தொட்டி பட்டியில் உள்ள மகளிர் சுய குழு ஒன்றில் உறுப்பினராக இருந்தார். இந்த குழுவில் உள்ளவர்கள் திருமங்கலத்தில் உள்ள வங்கி ஒன்றில் கடன் வாங்கி உள்ளனர். லோன் பணத்தை குழுவில் உள்ளவர்கள் ராஜலட்சுமியிடம் வங்கியில் செலுத்துமாறு கொடுத்துள்ளனர். ஆனால் அந்த பணத்தை சுசி என்ற ராஜலட்சுமி வங்கியில் செலுத்தவில்லை.

இதுகுறித்த புகாரின் பேரில் நாகையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு பேரையூர் நீதிமன்றத்தில் நடந்தது. நேற்று பேரையூர் நீதிபதி வேலுச்சாமி, சுசி என்ற ராஜலட்சுமிக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும் ரூ.5000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.


Related Tags :
Next Story