அண்ணன்-தம்பியை தாக்கிய வழக்கு:4 பேருக்கு சிறை தண்டனைகடலூர் கோர்ட்டு தீர்ப்பு


அண்ணன்-தம்பியை தாக்கிய வழக்கு:4 பேருக்கு சிறை தண்டனைகடலூர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 12 March 2023 12:15 AM IST (Updated: 12 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

அண்ணன்-தம்பியை தாக்கிய வழக்கில் 4 பேருக்கு சிறை தண்டனை விதித்து கடலூர் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

கடலூர்


கடலூர் தேவனாம்பட்டினம் கபிலர் தெருவை சேர்ந்த அருள் மகன்கள் ராஜன் (வயது 32), ராமச்சந்திரன். ஆட்டோ டிரைவரான ராஜன் கடந்த 14.5.2019 அன்று கடலூர் கம்மியம்பேட்டை பாலம் அருகில் தனது தம்பி ராமச்சந்திரனுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக காரில் வந்த திருப்பாதிரிப்புலியூர் குப்பங்குளத்தை சேர்ந்த மாயவன் மகன் சந்தோஷ் (34), கிருஷ்ணமூர்த்தி மகன் விஜய் (24), ராஜா மகன் பரமேஷ் (23), பிரகாஷ் மகன் தெனாலி என்கிற பிரியதர்ஷன் (23) ஆகியோர் காரை வேகமாக மோதுவது போல் ஓட்டி வந்துள்ளனர்.

இதை ராஜன் தட்டிக்கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த சந்தோஷ் உள்ளிட்ட 4 பேரும் ராஜனையும், ராமச்சந்திரனையும் பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொலை செய்ய முயன்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தோஷ், விஜய், பரமேஷ், தெனாலி ஆகியோரை கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக கடலூர் இரண்டாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

5 ஆண்டுகள் சிறை

இதில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி நீதிபதி அன்வர் சதாத் தனது தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட சந்தோஷ், விஜய் ஆகியோருக்கு தலா 5 ஆண்டு சிறை தண்டனையும், தலா ஆயிரம் ரூபாய் அபராதமும், பரமேசுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், தெனாலி என்கிற பிரியதர்ஷனுக்கு 6 மாத தண்டனையும் விதித்து உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் அருணாச்சலம் ஆஜராகி வாதாடினார்.


Next Story