5 பேருக்கு சிறை தண்டனை


5 பேருக்கு சிறை தண்டனை
x

கொலை முயற்சியில் ஈடுபட்ட 5 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது

திருநெல்வேலி

நெல்லை அருகே தாலுகா பாளையஞ்செட்டிகுளத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 41). இவரை அதே பகுதியை சேர்ந்த ராஜன் (66), செல்வராஜ் (39), லீலா (61), பிரபாகர் (40), பிலீப் (28) ஆகியோர் முன்விரோதம் காரணமாக அவதூறாக பேசி கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை நெல்லை கூடுதல் சார்பு அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இதனை நீதிபதி அமிர்தவேல் விசாரித்து ராஜன், செல்வராஜ், லீலா, பிரபாகர் ஆகிய 4 பேருக்கும் 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் தலா ரூ.2 ஆயிரம், பிலீப்புக்கு 2 ஆண்டு சிறை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.


Next Story