கணவரை தாக்கிய மனைவிக்கு சிறை தண்டனை-நெல்லை கோர்ட்டு தீர்ப்பு


கணவரை தாக்கிய மனைவிக்கு சிறை தண்டனை-நெல்லை கோர்ட்டு தீர்ப்பு
x

கணவரை தாக்கிய மனைவிக்கு சிறை தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டு தீர்ப்பு கூறியது

திருநெல்வேலி

பாளையங்கோட்டை கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் பீர்முகமது (வயது 59). இவரை அவருடைய மனைவி வேலம்மாள் மற்றும் அதே பகுதியை சேர்ந்த சிவன் (47) ஆகியோர் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் 28-ந் தேதி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதுகுறித்து பீர்முகமது சிவந்திப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை நெல்லை குற்றவியல் நடுவர் கோர்ட்டில் நடந்து வந்தது. நீதிபதி விஜயகுமார் வழக்கை விசாரித்து வேலம்மாளுக்கு 1 மாதம் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும், சிவனுக்கு 1½ ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.


Next Story