தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மீட்டுத்தர வேண்டும்


தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மீட்டுத்தர வேண்டும்
x

தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மீட்டுத்தர வேண்டும்

திருப்பூர்

திருப்பூர்

குவாரி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மீட்டுத்தர வேண்டும் என்று ஜல்லி கிரஷர், குவாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு கொடுத்து முறையிட்டனர்.

குவாரி உரிமையாளர்கள் மனு

திருப்பூர் மாவட்ட ஜல்லி கிரஷர் அன்ட் குவாரி உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் பாலசுப்பிரமணியம், காரணம்பேட்டை கிளை சங்க தலைவர் துரை, கிளை சங்கத்தை சேர்ந்த அப்புக்குட்டி, குணசேகர், தங்கவேல், சிவகுமார், ராஜேந்திரன் ஆகியோர் கலெக்டர் வினீத்திடம் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

திருப்பூர் மாவட்டம் கோடங்கிப்பாளையம், இச்சிப்பட்டி, சுக்கம்பாளையம், பூமலூர், 63 வேலம்பாளையம் கிராமங்களில் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்களால் கல்குவாரி நடத்தப்பட்டு வருகிறது. அரசிடம் முறையாக அனுமதி பெற்று குவாரி நடந்து வருகிறது. எங்களை நம்பி 3 ஆயிரம் குடும்பத்தினர் நேரடியாக வேலைவாய்ப்பு பெறுகிறார்கள். மறைமுகமாக 15 ஆயிரம் குடும்பத்தினர் வேலைவாய்ப்பு பெறுகிறார்கள். தற்போது உண்மையான சமூக ஆர்வலர்களின் பெயரை கெடுக்கும் நோக்கத்தோடு மோசடி நோக்கம் கொண்டு, உண்ணாவிரதம் இருந்து குவாரி, கிரஷர் தொழிலுக்கு எதிராக செயல்படுவதாலும், போராட்டங்கள் செய்வதாலும் பிரச்சினை ஏற்படுத்தி வருகிறார்கள்.

வாழ்வாதாரத்தை மீட்க வேண்டும்

இதை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல கடந்த 3-ந் தேதி காரணம்பேட்டையில் அடையாள உண்ணாவிரதம் இருந்தோம். தமிழ்நாடு முழுவதும் 2 நாட்கள் ஜல்லி கிரஷர் உரிமையாளர்கள் அறிவித்தார்கள். திருப்பூர், கோவை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் அமைப்புகள், விவசாயிகள் சங்கத்தினர் நேரடியாக கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார்கள். மக்கள் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். பொதுமக்கள், விவசாய கூலி தொழிலாளர்கள் பங்கேற்றனர். இந்த போராட்டத்தில் 20 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

எங்கள் மீது பொய் புகார் கொடுத்தவர்களின் போராட்டத்தால் தொழிலாளர்கள் உண்ணாநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். உண்ணாவிரதம் இருக்கும் நபர்களின் முகவரி மற்றும் அவர்களின் உண்மையான பின்புலத்தை ஆய்வு செய்ய வேண்டும். இந்த பிரச்சினையில் கலெக்டர் தலையிட்டு ஜல்லி, கிரஷர், குவாரி, லாரி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மீட்டுத்தர வேண்டும். பொய்யான புகாரால் நிறுத்தப்பட்டுள்ள குவாரியை இயக்க ஆவண செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

-------


Next Story