கடத்தூரில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு பூமிபூஜை-முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் பங்கேற்பு
தர்மபுரி
மொரப்பூர்:
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி கடத்தூரில் வருகிற 27-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த போட்டி நடைபெறும் இடத்தில் பூமிபூஜை நடந்தது. இதில் தர்மபுரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.பழனியப்பன் கலந்து கொண்டு, வாடிவாசல் அமைக்க பூமிபூஜை செய்து, பணியை தொடங்கி வைத்தார். இதில் மேற்கு மாவட்ட அவைத்தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மனோகரன், தலைமை செயற்குழு உறுப்பினர் சித்தார்த்தன், கடத்தூர் பேரூராட்சி தலைவர் மணி, கடத்தூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சிவப்பிரகாசம், கடத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் நெப்போலியன், பேரூராட்சி உறுப்பினர் வக்கீல் முனிராஜ், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி மதன் பாலாஜி, ஒன்றிய இளைஞரணி செயலாளர் ஆதம் டி.எக்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story