கிணற்றில் விழுந்த ஜல்லிக்கட்டு காளை உயிருடன் மீட்பு
கிணற்றில் விழுந்த ஜல்லிக்கட்டு காளை உயிருடன் மீட்கப்பட்டது
மதுரை
திருமங்கலம்
திருமங்கலத்தை அடுத்த கரடிக்கல் கிராமத்தில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட விருதுநகர் மாவட்டம் ரங்கராஜபுரம் பகுதியை சேர்ந்த ஹரிஹரன் பூமி என்பவரது காளை வாடிவாசல் வழியாக வெளியேறி போட்டியில் பங்கேற்றது. வீரர்கள் யாரிடமும் பிடிபடாத காளை மைதானத்தை விட்டு அருகேயுள்ள வயல்வெளிக்குள் புகுந்து ஓடியது. அங்கு தரையோடு தரையாக இருந்த 100 அடி கிணற்றில் தவறி விழுந்து நீரில் தத்தளித்தது. இது குறித்து தகவல் அறிந்த திருமங்கலம் தீயணைப்பு படையினர் மீட்பு கருவிகளுடன் விரைந்து சென்று காளையை உயிருடன் மீட்டனர்.
Related Tags :
Next Story