அனுமதி பெறாமல் ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்து விடப்பட்டது; வேடிக்கை பார்க்க சென்றவர் காயம்
அனுமதி பெறாமல் ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. இதில், வேடிக்கை பார்க்க சென்றவரை காளை முட்டியதில் காயம் அடைந்தார்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, திருவளக்குறிச்சி கிராமத்தில் கீழ ஏரி அன்ன காமாட்சி குட்டை அருகே நேற்று காலை இளைஞர்கள் சிலர் அரசு அனுமதி பெறாமல் ஜல்லிக்கட்டு காளைகளை அவிழ்த்து விட்டுள்ளனர். இதனை வேடிக்கை பார்க்க சென்ற 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரை காளை ஒன்று முட்டியது. இதில் லேசான காயமடைந்த அவர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவலறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜல்லிக்கட்டு காளைகளை அவிழ்த்து விடுவதை தடுத்து நிறுத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story