வன்னியன்விடுதியில் 17-ந் தேதி ஜல்லிக்கட்டு


வன்னியன்விடுதியில் 17-ந் தேதி ஜல்லிக்கட்டு
x

வன்னியன்விடுதியில் 17-ந் தேதி ஜல்லிக்கட்டு நடப்பதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின்போது நடத்தப்படுகிறது. இந்த ஆண்டில் தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே தச்சங்குறிச்சியில் கடந்த 8-ந் தேதி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இனி வரிசையாக ஆங்காங்கே என மாவட்டத்தில் தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடைபெறும். குறைந்தது 5 மாதங்களுக்கு இந்த ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் ஆலங்குடி அருகே வன்னியன்விடுதியில் வருகிற 17-ந் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கான அராசணை நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி 17-ந் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறுவது உறுதியாகி உள்ளது. கலெக்டர் கவிதாராமு மற்றும் அதிகாரிகள் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தினை ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். அப்போது ஜல்லிக்கட்டு நடத்த சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தி உள்ள வழிகாட்டல்கள் நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளதா? என பார்வையிடுவார்கள். இந்த ஆய்வின்போது பாதுகாப்பு நடவடிக்கைகளை பார்வையிட்டு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிப்பார்கள்.


Next Story