புதுக்கோட்டையில் இன்று நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு போட்டி ஒத்திவைப்பு..!


புதுக்கோட்டையில் இன்று நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு போட்டி ஒத்திவைப்பு..!
x

கோப்புப்படம்

புதுக்கோட்டையில் இன்று நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளாது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பாப்பான்விடுதி கிராமத்தில் ஜல்லிக்கட்டு இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற இருந்தது. இந்நிலையில் கடந்த 2 தினங்களாக ஆலங்குடி பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது.

இதையடுத்து அரிமளத்தில் நடந்த மஞ்சுவிரட்டில் காளை முட்டி போலீஸ்காரர் உள்பட 2 பேர் இறந்த சம்பவம் எதிரொலியாக புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே, வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், ஆலங்குடி தாசில்தார் விஸ்வநாதன் மற்றும் போலீசார் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள இடத்தையும் ஆய்வு செய்தனர். அப்போதும் மழை கொட்டி தீர்த்தது.

அப்போது, காளைகள் மற்றும் வீரர்களுக்கு எவ்வித இடையூறும் இருக்கக்கூடாது என்பதற்காக பாப்பான்விடுதி கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் பாப்பான்விடுதி விழா கமிட்டியாளர்கள் ஜல்லிக்கட்டை மாற்று தேதியில் நடத்துவதற்கு அனுமதி கோரினர். இதையடுத்து வருவாய்த்துறை சார்பில் இன்று நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.


Next Story