ரூ.9 லட்சத்தில் ஜல்லிதளம் அமைக்கும் பணி; மேயர் தொடங்கி வைத்தார்


ரூ.9 லட்சத்தில் ஜல்லிதளம் அமைக்கும் பணி; மேயர் தொடங்கி வைத்தார்
x

நெல்லையில் ரூ.9 லட்சத்தில் ஜல்லிதளம் அமைக்கும் பணியை மேயர் சரவணன் தொடங்கி வைத்தார்.

திருநெல்வேலி

நெல்லை மாநகராட்சி 16-வது வார்டு அனவரத சுந்தரவிநாயகர் கோவில் வடக்கு தெருவில் ரூ.9 லட்சம் மதிப்பில் ஜல்லிதளம் அமைக்கும் பணி நடந்தது. இந்த பணியை மேயர் பி.எம்.சரவணன் தொடங்கி வைத்தார்.பின்னர் அந்த பகுதி மக்களிடம் அடிப்படை வசதி குறித்து கேட்டறிந்து வாறுகால் வசதி, குடிநீர் வசதி, சாலைவசதி போன்ற வசதிகளை உடனடியாக நிறைவேற்றி கொடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். இதில் கவுன்சிலர் நித்திய பாலையா, உதவி செயற்பொறியாளர் பைஜூ உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story