கும்பகோணம் தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி


கும்பகோணம் தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி
x

கும்பகோணம் தாசில்தார் அலுவலகத்தில் 2-வது நாளாக ஜமாபந்தி நடந்தது. இதில் கோட்டாட்சியர் பூர்ணிமா கலந்து கொண்டார்.

தஞ்சாவூர்

கும்பகோணம்:

கும்பகோணம் தாசில்தார் அலுவலகத்தில் 2-வது நாளாக ஜமாபந்தி நடந்தது. இதில் கோட்டாட்சியர் பூர்ணிமா கலந்து கொண்டார்.

ஜமாபந்தி

கும்பகோணம் தாசில்தார் அலுவலகத்தில் நேற்று முன்தினம் 2-வது நாளாக ஜமாபந்தி நடந்தது. நிகழ்ச்சிக்கு வருவாய் கோட்டாட்சியர் பூர்ணிமா தலைமை தாங்கினார். தாசில்தார் வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.

இதில் சீனிவாசநல்லூர், மாங்குடி, இலந்தரை, விட்டலூர், விளங்குடி, அம்மன் குடி, சிவபுரம், மல்லபுரம், துக்காச்சி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

126 மனுக்கள்

ஜமாபந்தியில் பட்டா மாறுதல், முதியோர் உதவி தொகை உள்ளிட்ட 126 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டது. இதில் 21 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. 105 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது.இதில் கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் அலுவலர்கள் உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

பாபநாசம்

பாபநாசம் தாசில்தார் அலுவலகத்தில் 3 -வது நாளாக பாபநாசம் சரகத்திற்கு ஜமாபந்தி நடைபெற்றது. மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் முத்து வடிவேல் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து 218 மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பிரித்து வழங்கி உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இந்நிகழ்ச்சியில் பயிற்சி துணை கலெக்டர் விஷ்ணு பிரியா, பாபநாசம் தாசில்தார் பூங்கொடி, வட்ட வழங்கல் அலுவலர் சிவகுமார், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார்முருககுமார், திருவையாறு ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் நெடுஞ்செழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story