சீர்காழி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி
சீர்காழி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி உதவி கலெக்டர் தலைமையில் நடந்தது
சீர்காழி:
சீர்காழி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு உதவி கலெக்டர் அர்ச்சனா தலைமை தாங்கினார். சீர்காழி தாசில்தார் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் அரசூர், திருமையிலாடி, கூத்தியம்பேட்டை, அகனி, நிம்மேலி, வள்ளுவக்குடி, கொண்டல் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் வீட்டுமனை பட்டா, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, இலவச வீட்டு மனை பட்டா, புதிய குடும்ப அட்டை விண்ணப்பம், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல், பட்டா மாறுதல் உள்ளிட்ட மனுக்களை வழங்கினர். மனுக்களை பெற்றுக்கொண்ட உதவி கலெக்டர் அர்ச்சனா, தகுதியான பயனாளிகளின் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு உடனுக்குடன் தீர்வு காணப்படும் என தெரிவித்தார். இதில் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.