ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி


ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி
x
தினத்தந்தி 16 May 2023 12:15 AM IST (Updated: 16 May 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.

தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம்:

ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் சிவக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஸ்ரீவைகுண்டம் தாலுகாவிற்கு உட்பட்ட வருவாய் கிராம மக்களின் நீண்ட கால கோரிக்கைகள் உடனடியாக தீர்த்து வைக்கும் பொருட்டு தாலுகா அலுவலகத்தில் இன்று(செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரான அபுல் காசிம் தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெறுகிறார். ஜமாபந்தியின் முதல் நாளான இன்று வல்லநாடு உள்வட்ட பகுதிகளான கலியாவூர், ஆழந்தா, பூவாணி, சிங்கத்தாகுறிச்சி, வடவல்லநாடு, வல்லநாடு கஸ்பா, ஆழிகுடி ஆகிய பகுதிகளுக்கும், நாளை(புதன்கிழமை) முறப்பநாடு புதுகிராமம், கீழபுத்தனேரி, முறப்பநாடு கோவில்பத்து, வசவபுரம், தெய்வச்செயல்புரம் உள்வட்ட பகுதிகளான செக்காரக்குடி பகுதி 1, மீனாட்சிபுரம் செக்காரக்குடி பகுதி 2, வடக்கு காரசேரி, தெய்வச்செயல்புரம் ஆகிய பகுதிகளுக்கும், நாளைமறுநாள்(வியாழக்கிழமை) செட்டிமல்லன்பட்டி, எல்லைநாயக்கன்பட்டி, கீழவல்லநாடு, நாணல்காடு, மணக்கரை, ஆழ்வார்கற்குளம், ஆறாம்பண்ணை, கொங்கராயகுறிச்சி ஆகிய பகுதிகளுக்கும் நடைபெறுகிறது, என தெரிவித்துள்ளார்.


Next Story