வெம்பக்கோட்டையில் ஜமாபந்தி


வெம்பக்கோட்டையில் ஜமாபந்தி
x

வெம்பக்கோட்டையில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது.

விருதுநகர்

தாயில்பட்டி,

வெம்பக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அனிதா தலைமையில் நடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து 15 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. பின்னர் ஆலங்குளம் குறுவட்டத்தை சேர்ந்த நதிக்குடி, கொங்கன் குளம், ஆலங்குளம், எதிர்கோட்டை கிராமங்களுக்கு ஜமாபந்தி நடைபெற்றது. ஜமாபந்தியின் போது வருவாய் கோட்டாட்சியர் அனிதா, வெம்பக்கோட்டை வட்டாட்சியர் (பொறுப்பு) ராமசுப்பிரமணியன், வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் சரவணன், வெம்பக்கோட்டை தலைமையிடத்து துணை வட்டாட்சியர் கோதண்டராமன், மண்டல துணை வட்டாட்சியர் அகத்தீஸ்வரன் உள்பட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து வட்டாட்சியர் அலுவலகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. முடிவில் ஆலங்குளம் வருவாய் ஆய்வாளர் அறிவழகன் நன்றி கூறினார்.


Next Story