சிவகாசியில் ஜமாபந்தி


சிவகாசியில் ஜமாபந்தி
x

சிவகாசி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி தாலுகா அலுவலகத்தில் நேற்று காலை ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வேண்டுராயபுரம், துரைச்சாமிபுரம், மாரனேரி, ஆனையூர், கொங்கலாபுரம், சிவகாசி, விஸ்வநத்தம், நாரணாபுரம், வாடி, வி.சொக்கலிங்காபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்தவர்கள் தங்கள் பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண மனு கொடுத்தனர். மனுக்களை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் விஜயகுமார் பெற்றுக்கொண்டார். உரிய நடவடிக்கை விரைவில் எடுப்பதாக உறுதி அளித்தார். இந்தநிகழ்ச்சியில் சிவகாசி தாசில்தார் லோகநாதன், தனி தாசில்தார் (சமூக பாதுகாப்பு திட்டம்) சாந்தி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அதேபோல ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் கலெக்டர் ஜெயசீலன் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தாசில்தார் ரங்கசாமி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story