வருகிற 7 முதல் 22-ந் தேதி வரைதாலுகா அலுவலகங்களில் ஜமாபந்திகலெக்டர் தகவல்


வருகிற 7 முதல் 22-ந் தேதி வரைதாலுகா அலுவலகங்களில் ஜமாபந்திகலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 2 Jun 2023 12:15 AM IST (Updated: 2 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் வருகிற 7 முதல் 22-ந் தேதி வரை தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி நடைபெறுகிறது என்று கலெக்டர் அருண் தம்புராஜ் தொிவித்துள்ளார்.

கடலூர்


கடலூர் மாவட்டத்திற்குட்பட்ட 10 தாலுகா அலுவலகங்களில் வருகிற 7.6.2023 முதல் ஜமாபந்தி நடைபெற உள்ளது. அதாவது குறிஞ்சிப்பாடி தாலுகா அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் தலைமையில் வருகிற 7-ந் தேதி முதல் 15-ந் தேதி வரையிலும், பண்ருட்டி மற்றும் கடலூர் தாலுகா அலுவலகங்களில் 7-ந் தேதி முதல் 21-ந் தேதி வரையிலும், சிதம்பரம் சப்-கலெக்டர் தலைமையில் காட்டுமன்னார்கோவில் தாலுகா அலுவலகத்தில் 7-ந் தேதி முதல் 21-ந் தேதி வரையிலும், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தலைமையில் புவனகிரி தாலுகா அலுவலகத்தில் 7-ந் தேதி முதல் 15-ந் தேதி வரையும் ஜமாபந்தி நடைபெற உள்ளது.

ஸ்ரீமுஷ்ணம், திட்டக்குடி

இதேபோல் சிதம்பரத்தில் கடலூர் தனித்துணை ஆட்சியர் (முத்திரைத்தாள்) தலைமையில் 21-ந் தேதி வரையும், தனித்துணை ஆட்சியர் (நில எடுப்பு) தலைமையில் ஸ்ரீமுஷ்ணத்தில் 15-ந் தேதி வரையிலும், விருத்தாசலம் கோட்டாட்சியர் தலைமையில் விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் 7-ந் தேதி முதல் 22-ந் தேதி வரையும், திட்டக்குடியில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையில் 21-ந் தேதி வரையும், வேப்பூர் தாலுகா அலுவலகத்தில் தனித்துணை ஆட்சியர் (வருவாய் நீதிமன்றம்) தலைமையில் 14-ந் தேதி வரையிலும் நடக்கிறது.

கோரிக்கை மனுக்கள்

எனவே பொதுமக்கள் பட்டா மற்றும் இதர நலத்திட்ட கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை ஜமாபந்தி நடக்கும் நாளன்று சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகத்தில், வருவாய் தீர்வாய அலுவலரிடம் நேரில் சமர்ப்பிக்கலாம். பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களால் உரிய விசாரணை நடத்தப்பட்டு, தகுதியின் அடிப்படையில் உடனடியாக உத்தரவுகள் பிறப்பிக்கப்படும்.

அதனால் பொதுமக்கள் ஜமாபந்தி நடைபெறும் நாளில் தங்களது மனுக்களை சமர்ப்பித்து பயன்பெறலாம்.

மேற்கண்ட தகவல் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story