தேன்கனிக்கோட்டையில் ஜமாபந்தி நிறைவு; 850 மனுக்களுக்கு தீர்வு


தேன்கனிக்கோட்டையில் ஜமாபந்தி நிறைவு; 850 மனுக்களுக்கு தீர்வு
x
தினத்தந்தி 14 Jun 2023 6:45 PM GMT (Updated: 15 Jun 2023 1:07 AM GMT)
கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை

தேன்கனிக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் கடந்த 2-ந் தேதி ஜமாபந்தி தொடங்கியது. ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இறுதி நாளான நேற்று வரை மொத்தம் 1,695 மனுக்களை பொதுமக்கள் வழங்கினர். அதில் 850 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.

ஜமாபந்தி இறுதி நாளான நேற்று தாலுகா அலுவலகத்தில் நிகழ்ச்சி நடந்தது. இதில் இயற்கை மரண ஈமச்சடங்கு நிதி, முதியோர் உதவித்தொகை, ரேஷன் கார்டு, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், உட்பிரிவு பட்டா, இலவச வீட்டுமனைப்பட்டா என மொத்தம் 151 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் சண்முகம், தாசில்தார் சரவணமூர்த்தி, தனி தாசில்தார் மோகன்தாஸ், மண்டல துணை தாசில்தார்கள் மதன்ராஜ், ராஜாகண்ணு உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story