பென்னாகரத்தில் ஜமாபந்தி ஜி.கே.மணி எம்.எல்.ஏ. பங்கேற்பு


பென்னாகரத்தில் ஜமாபந்தி   ஜி.கே.மணி எம்.எல்.ஏ. பங்கேற்பு
x

பென்னாகரத்தில் ஜமாபந்தியில் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. பங்கேற்றார்.

தர்மபுரி

பென்னாகரம்:

பென்னாகரம் தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. தாசில்தார் அசோக்குமார் முன்னிலை வகித்தார். இதில் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். ஜமாபந்தியில் பொதுமக்கள் கலந்துகொண்டு பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, ஆதரவற்ற விதவை உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை அளித்தனர். இதில் 96 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் தலைமையிடத்து துணை தாசில்தார் செந்தில்குமார், துணை தாசில்தார்கள் சக்திவேல், சாந்தி, வட்ட வழங்கல் அலுவலர் பாலகிருஷ்ணன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story