அரியலூரில் இன்று ஜமாபந்தி
அரியலூரில் ஜமாபந்தி இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது.
அரியலூர்
அரியலூரில் இன்று (வியாழக்கிழமை) ஜமாபந்தி நடைபெறுகிறது. அரியலூர் தாசில்தார் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் தலைமை தாங்குகிறார். ஜமாபந்தியில் கீழப்பழுவூர் உள்வட்டத்திற்குட்பட்ட மல்லூர், வாரணவாசி, பார்பனச்சேரி, பூண்டி, மேலப்பழுவூர், கீழையூர், சாத்தமங்கலம், அயன்சுத்தமல்லி, வெங்கனூர், சன்னாவூர் (வடக்கு, தெற்கு), பளிங்காநத்தம், கரையவெட்டி, கீழக்காவட்டாங்குறிச்சி, வெற்றியூர் ஆகிய வருவாய் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை தொடர்பான மனுவினை அளித்து பயன்பெறலாம் என்று கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story