பல்லடம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி
பல்லடம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி
பல்லடம்
பல்லடம் தாசில்தார் ஜெயசிங் கூறியதாவது:-
பல்லடம் வருவாய் வட்டத்தில் ஜமாபந்தி திருப்பூர் மாவட்ட கலெக்டர் தலைமையில் 23-ந் தேதி ெதாடங்கி 26-ந் தேதி வரை நடக்கிறது. அதன்படி 23-ந் தேதி பல்லடம் உள்வட்டம் பல்லடம், பணிக்கம்பட்டி, சித்தம்பலம், வடுகபாளையம், நாரணாபுரம், கரைப்புதூர், கணபதிபாளையம், 24-ந் தேதி கரடிவாவி உள்வட்டம் பருவாய், கஸ்பா அய்யம்பாளையம், கரடிவாவி, மல்லேகவுண்டன்பாளையம், புளியம்பட்டி, கே.கிருஷ்ணாபுரம், அனுப்பட்டி கிராமங்களுக்கு ஜமாபந்தி நடக்கிறது.
25-ந் தேதி சாமளாபுரம் உள்வட்டம் சாமளாபுரம், இச்சிபட்டி, பூமலூர், வேலம்பாளையம், சுக்கம்பாளையம், செம்மிபாளையம், கோடங்கிபாளையம், 26-ந் தேதி பொங்கலூர் உள்வட்டம் பொங்கலூர், மாதப்பூர், இளவந்தி, கேத்தனூர், வாவிபாளையம், வே.வடமலைபாளையம், வே.கள்ளிப்பாளையம், காட்டூர் கிராமங்களுக்கு நடைபெறவுள்ளது.
சம்பந்தப்பட்ட பகுதி பொதுமக்கள் காலை 10 மணி முதல் திருப்பூர் கலெக்டரிடம் மனுக்கள் கொடுத்து பயன் பெறலாம் .
இவ்வாறுஅவர் கூறினார்.
-----------