திண்டுக்கல் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ விலை வீழ்ச்சி


திண்டுக்கல் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ விலை வீழ்ச்சி
x
தினத்தந்தி 5 July 2023 2:30 AM IST (Updated: 5 July 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ விலை வீழ்ச்சியடைந்து கிலோ ரூ.350-க்கு விற்பனை ஆனது.

திண்டுக்கல்

திண்டுக்கல் பூ மார்க்கெட்டுக்கு சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் ஓசூரில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. வரத்து, விற்பனையை பொறுத்து தினமும் விலை நிர்ணயம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன்பு மல்லிகைப்பூ கிலோ ரூ.600 வரை விற்பனை ஆனது. இந்தநிலையில் நேற்று அதன் விலை குறைந்து கிலோ ரூ.350 விற்பனை செய்யப்பட்டது.

இதுகுறித்து பூ வியாபாரிகள் கூறும்போது, தற்போது தேய்பிறை முகூர்த்த நாட்கள் என்பதால் பூக்களின் தேவை குறைந்தது. இதையொட்டி மல்லிகைப்பூ உள்பட மற்ற பூக்களின் விற்பனையும் குறைந்துபோனது என்றார். திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் நேற்று (விலை கிலோவில்) முல்லை, ஜாதிப்பூ தலா ரூ.250, கனகாம்பரம் ரூ.200, செண்டுமல்லி ரூ.80, கோழி கொண்டை ரூ.70, சம்பங்கி ரூ.50, அரளி ரூ.150-க்கு விற்பனை ஆனது.


Next Story