திண்டுக்கல் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ விலை வீழ்ச்சி


திண்டுக்கல் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ விலை வீழ்ச்சி
x
தினத்தந்தி 2 July 2023 2:30 AM IST (Updated: 2 July 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ விலை வீழ்ச்சி அடைந்தது. ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.300-க்கு விற்கப்படுகிறது.

திண்டுக்கல்

திண்டுக்கல் பூ மார்க்கெட்டுக்கு சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் ஓசூரில் இருந்து பூக்கள் விளைவிக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. நாள்தோறும் வரத்து, நிலவரத்தை பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன்பு மல்லிகைப்பூ கிலோ ரூ.600 வரையில் விற்பனை ஆனது. இந்தநிலையில் அதன் விலை வீழ்ச்சியடைந்து கிலோ ரூ.300-க்கு நேற்று விற்பனை செய்யப்பட்டது.

இதுகுறித்து பூ வியாபாரிகள் கூறும்போது, திண்டுக்கல்லில் மல்லிகைப்பூ சீசன் தற்போது நிலவி வருகிறது. இதையொட்டி நாள்தோறும் அதிக அளவில் மல்லிகை பூக்கள் இங்கு விற்பனைக்கு வருகிறது. மேலும் நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் இருந்து மல்லிகை பூக்களை வியாபாரிகள் வாங்கி வந்து இங்கு விற்பனை செய்கின்றனர். இதுபோன்ற காரணத்தால் நேற்று மட்டும் சுமார் 4 டன் மல்லிகை பூக்கள் விற்பனைக்கு வந்தது. இதுதவிர பெரிய அளவில் முகூர்த்தம், விசேஷங்கள் ஏதும் இல்லாததால் மல்லிகை பூக்கள் விற்பனை ஆகாமல் தேங்கியது. இதையொட்டி மல்லிகைப்பூ விலை வீழ்ச்சியடைந்தது என்றார்.

பூமார்க்கெட்டில் நேற்று (விலை கிலோவில்) ஜாதிப்பூ ரூ.250, கனகாம்பரம், முல்லை தலா ரூ.200, அரளி, ரோஜா தலா ரூ.150, கோழிக்கொண்டை ரூ.80, சம்பங்கி ரூ.50-க்கு விற்பனை ஆனது.


Related Tags :
Next Story