மல்லிகைப்பூ விலை கிடுகிடு உயர்வு


மல்லிகைப்பூ விலை கிடுகிடு உயர்வு
x

தோவாளை பூ மார்க்கெட்டில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி மல்லிகை பூ கிலோ ரூ.1,800-க்கு விற்பனையானது.

கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழி:

தோவாளை பூ மார்க்கெட்டில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி மல்லிகை பூ கிலோ ரூ.1,800-க்கு விற்பனையானது.

பூ மார்க்கெட்

குமரி மாவட்டம் தோவாளையில் பிரசித்தி பெற்ற பூ மார்க்கெட் உள்ளது. இங்கு குமரி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பிற பகுதிகளான நெல்லை, மதுரை, ஓசூர், தேவகோட்டை உள்பட பல ஊர்களில் இருந்தும் பூக்கள் வருகின்றன.

இங்கு வரும் பூக்களை குமரி மாவட்ட வியாபாரிகள் மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் வியாபாரிகள் வந்து வாங்கி செல்வார்கள். பூக்களின் தேவை அதிகமாக இருந்து, பூக்கள் வரத்து குறைவாக இ்ருந்தாலும், பண்டிகை காலங்களிலும் பூக்களின் விலை உயர்ந்து காணப்படும்.

இந்தநிலையில் ஓணம் பண்டிகை தொடங்கியதாலும், விநாயகர் சதுர்த்தி மற்றும் சுபமுகூர்த்த நாள் என்பதாலும் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து காணப்பட்டது.

பூக்கள் விலை உயர்வு

ஒரு கிலோ ரூ.1,200-க்கு விற்பனையான மல்லிகைப்பூ ரூ.600 உயர்ந்து ரூ.1,800-க்கு விற்கப்பட்டது. இதே போல் மற்ற பூக்களின் விலையும் உயர்ந்தது. பூக்களின் விலை விவரம் கிலோவில் வருமாறு:-

அரளி ரூ.250, பிச்சி ரூ.900, முல்லை ரூ.850, சம்பங்கி ரூ.500, கனகாம்பரம் ரூ.1,000, வாடாமல்லி ரூ.100, துளசி ரூ.30 கோழிப்பூ ரூ.60, பட்டன் ரோஸ் ரூ.220, மஞ்சள் கேந்தி ரூ.45, சிவப்புேகந்தி ரூ.60, சிவந்தி (மஞ்சள்) ரூ.150, சிவந்தி வெள்ளை ரூ.170, கொழுந்து ரூ.90, மருக்கொழுந்து ரூ.120, ஸ்ெடம்பு ரோஸ் ஒரு கட்டு ரூ.320, தாமரை ஒரு எண்ணம் 10 ரூபாய், பச்சை ஒரு கட்டு 10 ரூபாய், ரோஸ் பாக்கெட் ரூ.40 என விற்பனை செய்யப்பட்டது.


Next Story