ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்


ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
x

வாணியம்பாடி அருகே ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தும்பேரி பகுதியில் வாணியம்பாடி தொகுதி அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. செந்தில்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நாட்டறம்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் சாம்ராஜ் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் சின்னையா, வீரமணி கலந்து கொண்டு பேசினார்கள்.

கூட்டத்தில் கே.சி.வீரமணி பேசுகையில், கள்ளிப்பால் ஊற்றி குழந்தையை கொல்லும் நிலையை மாற்றி தொட்டில் குழந்தை திட்டத்தை கொண்டு வந்தவர் ஜெயலலிதா. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் தி.மு.க. அரசு திண்டாடி வருகிறது என்றார்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.வடிவேல், மாவட்ட துணை செயலாளர் ராஜேந்திரன், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் டெல்லிபாபு, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் குட்லக் ரமேஷ், மாவட்ட மகளிர் அணி செயலாளர் மஞ்சுளா கந்தன் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story