ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
விருத்தாசலத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
விருத்தாசலம்
விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதற்கு நகர செயலாளர் சந்திரகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் என்ஜினீயர் ரவிச்சந்திரன் வரவேற்றார். ஒன்றிய செயலாளர்கள் பச்சமுத்து, தம்பிதுரை, வேல்முருகன் ஆகியோர் தொடக்க உரையாற்றினர். ஒன்றிய செயலாளர்கள் முனுசாமி, சின்னரகுராமன், முன்னாள் நகர் மன்ற தலைவர் அருள் அழகன், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் பாஸ்கரன், மாவட்ட பாசறை செயலாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., , தலைமை கழக பேச்சாளர்கள் பாபு, ஏங்கல்ஸ், முன்னாள் எம்.எல்.ஏ.கலைச்செல்வன், கோவை மண்டல துணை செயலாளர் வக்கீல் அருண் ஆகியோர் கலந்து கொண்டு அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து விளக்கி பேசினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ. நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதில் நகர துணைச் செயலாளர் அரங்க மணிவண்ணன், முன்னாள் அரசு வக்கீல் விஜயகுமார், ஒன்றியக்குழு தலைவர் மேனகா விஜயகுமார், முன்னாள் ஒன்றியக்குழு துணை தலைவர் கனக சிகாமணி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மங்கலம்பேட்டை பேரூர் துணை செயலாளர் பாலமுருகன் நன்றி கூறினார்.