"ஜெயலலிதா சிகிச்சை: சுகாதாரத்துறை செயலாளரின் பதில் வியப்பில் ஆழ்த்தியது" - ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை


ஜெயலலிதா சிகிச்சை: சுகாதாரத்துறை செயலாளரின் பதில் வியப்பில் ஆழ்த்தியது -  ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை
x

கால்நடை மருத்துவரான ராதாகிருஷ்ணனை, தகுதியின் அடிப்படையில் ஒரு மருத்துவர் என கூறாமல் இருப்பதே உகந்தது என அதில் கூறப்பட்டுள்ளது.

சென்னை,

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரைத்த வி.கே.சசிகலா உள்பட 8 பேர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சட்ட வல்லுநர்கள் ஆலோசனையை பெற்று நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. மருத்துவர் சிவகுமார், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் , ராமமோகன் ராவ், பிரதாப் ரெட்டி உள்பட 8 பேர் மீது ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

குறிப்பாக முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவை சிறந்த சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு அழைத்து செல்லாதது ஏன்? என்ற கேள்விக்கு அத்தகைய நடவடிக்கை நமது இந்திய மருத்துவர்களை அவமானப்படுத்தும் செயலாக இருக்கும் என சுகாதார துறையின் செயலாளர் அளித்த பதில் வியப்பில் ஆழ்த்தியது என கூறியுள்ளது.

கால்நடை மருத்துவரான ராதாகிருஷ்ணனை, தகுதியின் அடிப்படையில் ஒரு மருத்துவர் என கூறாமல் இருப்பதே உகந்தது என அதில் கூறப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை செயலாளரின் கூற்று சரியானவை என எடுத்துக் கொண்டாலும் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க லண்டனில் இருந்தும் சிங்கப்பூரிலிருந்தும் மருத்துவர்கள் அழைத்துவரப்பட்டனர்.

இது இந்திய மருத்துவர்களின் தன்முனைப்பிற்கு அழுத்தம் அளிப்பதாக இல்லையா என ஆறுமுகசாமி ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.


Next Story