ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்


ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
x

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாட்டப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.

பிறந்தநாள்

அ.தி.மு.க. முன்னாள் பொதுச் செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க.வினர் அலங்கரித்து வைக்கப்பட்ட ஜெயலலிதா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் ஏற்பாட்டில், டூவிபுரத்தில் உள்ள மாவட்ட அ.தி.மு.க. அலுவலகம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்ட ஜெயலலிதா உருவப்படத்துக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள், இனிப்புகள் வங்கியும் கொண்டாடினர்.

நிகழ்ச்சியில் மாநில அமைப்புசாரா ஓட்டுனர் அணி இணை செயலாளர் பெருமாள் சாமி, மாவட்ட துணை செயலாளர் சந்தனம், மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் வக்கீல் வீரபாகு, சார்பு அணி செயலாளர்கள் டேக் ராஜா, நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மதிய உணவு

இதே போன்று அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் ஏற்பாட்டில் தூத்துக்குடி லூசியா மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு இல்லம், வாகைகுளம் அரசு நகரில் உள்ள அலெக்ஷ் கைலாஸ் முதியோர் இல்லம் ஆகியவற்றில் மாவட்ட இளைஞர், இளம்பெண்கள் பாசறை முன்னாள் தலைவர் சி.த.செ.ராஜாசிங் மதிய உணவு வழங்கினார்.

ஆறுமுகநேரி

ஆறுமுகநேரி மெயின் பஜாரில் நகர அ.தி.மு.க. செயலாளர் பி. ஆர்.ரவிச்சந்திரன் தலைமையில் ஜெயலலிதாவின் பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது. அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அவரது உருவப்படத்திற்கு நகர அவைத் தலைவர் கனகராஜ், துணை செயலாளர் பெரியசாமி, நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் ராமசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்,

மூலக்கரை சாலையில் அ.ம.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

கோவில்பட்டி

கோவில்பட்டி நகர அ.தி.மு.க. செயலாளர் விஜயபாண்டியன் தலைமையில் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் அய்யா துரை பாண்டியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து முன்னாள் தலைவர் சத்யா, கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் துணை தலைவர் பழனிச்சாமி, ஜெயலலிதா பேரவை மாவட்ட இணை செயலாளர் நீலகண்டன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

கோவில்பட்டி ராஜீவ் நகர் நீடிய வாழ்வு முதியோர் இல்லத்தில், அதிமுக கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் முருக லட்சுமி ஏற்பாட்டில் புத்தாடைகள் மற்றும் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

கழுகுமலை

கழுகுமலை கம்மவார் திருமண மண்டபம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு அ.தி.மு.க. மாவட்ட ஜெயலலிதா பேரவை அவைத் தலைவர் மாரியப்பன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு ஸ்ரீதர் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் நகர பொருளாளர் சுந்தரப்பன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story