ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானது தான் - சசிகலாவை சந்தித்த பின் டிடிவி தினகரன் பேட்டி
ஆறுமுகசாமி ஆணையமே அரசியலுக்காக தான் உருவாக்கப்பட்டது என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
சென்னை,
சென்னை மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கை இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.' அறிக்கையில் சசிகலா, டாக்டர். கே.எஸ்.சிவகுமார், அப்போதைய சுகாதரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்யப்பட்டு, ஆறுமுகசாமி ஆணையம் விசாரணைக்கு பரிந்துரைப்பதாக, சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது.
இந்தநிலையில் சென்னை தி.நகரில் சசிகலாவை சந்தித்த பின் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்திப்பில் கூறியதாவது:-
ஜெயலலிதாவின் மரணம் குறித்த சர்ச்சைகளை எழுப்பியதே திமுக தான். ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானது தான். ஜெயலலிதாவை மருத்துவமனையில் இருந்தபோது தான் நான் பார்த்தேன்.ஜெயலலிதா இறந்த தேதியில் எந்த குழப்பமும் இல்லை. ஆறுமுகசாமி ஆணையமே அரசியலுக்காக தான் உருவாக்கப்பட்டது தான். அரசியல் ரீதியாகவும், சட்டரீதியாகவும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் எதிர்கொள்வோம் என்றார்.