கடலூர் மாவட்ட சிலம்ப போட்டியில் ஜெயப்பிரியா பள்ளி மாணவி தங்கம் வென்று சாதனை படைத்தாா்.


கடலூர் மாவட்ட சிலம்ப போட்டியில் ஜெயப்பிரியா பள்ளி மாணவி தங்கம் வென்று சாதனை படைத்தாா்.
x

ஜெயப்பிரியா பள்ளி மாணவி தங்கம் வென்று சாதனை

கடலூர்

பண்ருட்டி:

தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கடலூர் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி பண்ருட்டியில் நடைபெற்றது. இதில் நெய்வேலி வடக்குத்து ஜெயப்பிரியா வித்யாலயா பப்ளிக் பள்ளியை சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவி சாய் ஸ்ரீ யாழினி 29-31 கிலோ எடை பிரிவில் தங்க பதக்கம் வென்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்ப போட்டியில் கலந்து கொண்டதற்கும், தன்னுடைய இந்த வெற்றிக்கும் ஜெயப்பிரியா பள்ளியில் தனக்கு அளிக்கப்படும் தனித் திறன் பயிற்சியே காரணம் என்று மாணவி சாய் ஸ்ரீ யாழினி பெருமையுடன் கூறினார்.

சாதனை புரிந்த மாணவி சாய் ஸ்ரீ யாழினியை பள்ளியின் நிர்வாக இயக்குநர் சி.ஆர்.ஜெய்சங்கர், பள்ளியின் இயக்குனர் என்.எஸ்.தினேஷ், செயலாளர் சிந்து, முதல்வர் பிந்து, சிலம்ப பயிற்சி ஆசிரியர் பிரபாகரன் மற்றும் ஆசிரியர்கள் வெகுவாக பாராட்டினர்.


Next Story