ஆட்டோ மீது ஜீப் மோதி டிரைவர் பலி
வடமதுரை அருகே ஆட்டோ மீது ஜீப் மோதியதில் டிரைவர் பலியானார்.
வடமதுரை அருகே உள்ள காட்டுப்பட்டி நிலப்பட்டியை சேர்ந்தவர் செல்லப்பாண்டி (வயது 48), இவர் அதே பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளையில் டிராக்டர் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை செல்லப்பாண்டி ஒரு ஜீப்பில் திண்டுக்கல்லில் இருந்து மலைக்கேணி செல்லும் சாலையில் கம்பிளியம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த ஜீப் தாறுமாறாக ஓடி சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ மீது மோதியது. அதன் பின்னர் சாலையில் நடந்து சென்ற கம்பளியம்பட்டியை சேர்ந்த முருகேஸ்வரி என்பவர் மீதும் மோதியது.
இதில் செல்லப்பாண்டி படுகாயமடைந்தனர். முருகேஸ்வரி லேசான காயங்களுடன் உயிர்தப்பினார். செல்லப்பாண்டியை அருகில் இருந்தவர்கள் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே செல்லப்பாண்டி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அங்கமுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்த செல்லப்பாண்டிக்கு புவனேஸ்வரி என்ற மனைவியும் 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.