ஜீப் கவிழ்ந்து 8 பேர் காயம்
நாடுகாணியில் ஜீப் கவிழ்ந்து 8 பேர் காயமடைந்தனர்.
கூடலூர்
பந்தலூர் தாலுகா சேரம்பாடியில் இருந்து கூடலூருக்கு ஜீப் வந்து கொண்டிருந்தது. அதில் சேரம்பாடி பகுதியை சேர்ந்த 8 பேர் கூடலூரில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வந்தனர். நாடுகாணியை கடந்து பாண்டியாறு குடோன் நோக்கி வந்த போது, திடீரென ஜீப் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஜீப்பில் பயணம் செய்த 8 பேரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். தகவல் அறிந்த தேவாலா போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire