ஜீப் கவிழ்ந்து விபத்து; 5 தொழிலாளர்கள் படுகாயம்


ஜீப் கவிழ்ந்து விபத்து; 5 தொழிலாளர்கள் படுகாயம்
x
தினத்தந்தி 27 Dec 2022 12:15 AM IST (Updated: 27 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஜீப் கவிழ்ந்து விபத்தில் 5 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.

நீலகிரி

பந்தலூர்,

பந்தலூர் அருகே எருமாடு பகுதியில் இருந்து கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் அம்பலவயலுக்கு தொழிலாளர்களை ஏற்றி கொண்டு ஜீப் சென்றது. பின்னர் நேற்று மாலையில் கட்டுமான பணி முடிந்ததும் 5 தொழிலாளர்கள் ஜீப் எருமாடு பகுதிக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது அம்பலவயலில் ஜீப் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் தொழிலாளர்கள் 5 பேர் படுகாயம் அடைந்தனர். உடனே அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து அம்பலவயல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story