ஜெயங்கொண்டம் ஒன்றியக்குழு கூட்டம்


ஜெயங்கொண்டம் ஒன்றியக்குழு கூட்டம்
x

ஜெயங்கொண்டம் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.

அரியலூர்

ஜெயங்கொண்டம்:

ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியக்குழுவின் சாதாரண கூட்டம், ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் காடுவெட்டி ரவி என்ற ரவிஷங்கர் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில் மற்றும் முருகன் (கிராம ஊராட்சி), ஒன்றிய துணைத் தலைவர் லதா கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக பொறியாளர் நடராஜன் வரவேற்றார். மேலும் ஒன்றிய செலவினங்கள் உள்ளிட்ட 15 தீர்மானங்களை கணக்கர் மாலதி வாசித்தார். கூட்டத்தில், ஒன்றியத்தில் நடைபெறும் பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும். மக்களுடைய அடிப்படை வசதிகள், தேவையான பணிகளை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் பிரித்திவிராஜன், நடராஜன், ராஜசேகர், சிவக்குமார், அனைத்து கவுன்சிலர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மேலாளர் தாமோதரன் நன்றி கூறினார்.


Next Story