ஜெனக நாராயணபெருமாள் கள்ளழகராக வெண்குதிரையில் வைகை ஆற்றில் இறங்கினார்


சோழவந்தானில் ஜெனக நாராயண பெருமாள் கள்ளழகராக வெண்குதிரையில் எழுந்தருளி வைகை ஆற்றில் இறங்கினார். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மதுரை

சோழவந்தான்,

சோழவந்தானில் ஜெனக நாராயண பெருமாள் கள்ளழகராக வெண்குதிரையில் எழுந்தருளி வைகை ஆற்றில் இறங்கினார். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஜெனக நாராயணபெருமாள் கோவில்

சோழவந்தான் ஜெனக நாராயணப்பெருமாள் கோவில் மிகவும் பழமை வாய்ந்ததாகும். இந்த கோவிலில் சித்ரா பவுர்ணமி அன்று வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கி வருகிறார். இந்த ஆண்டு நேற்று அதிகாலை அதிர்வேட்டு முழங்க கோவிலில் இருந்து வெள்ளை குதிரை வாகனத்தில் பச்சைப்பட்டு உடுத்தி கள்ளழகர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

சுவாமி புறப்பட்டு சன்னதிதெரு, 46 நம்பர்ரோடு, போலீஸ் நிலையம், தீயணைப்பு நிலையம், தெற்கு ரதவீதி, மேலரதவீதி வழியாக வைகை பாலம் அருகே எம்.வி.எம். மருதுமகாலில் சிறப்பு பூஜை நடந்தது.

இதில் பா.ஜனதா விவசாயி மாநில துணைத்தலைவர் மணிமுத்தையா, வார்டு கவுன்சிலர்கள் வள்ளிமயில், மருதுபாண்டியன் வரவேற்று அன்னதானம் வழங்கினார்கள். சனீஸ்வரன் கோவிலில் ராமசுப்பிரமணியன் அர்ச்சகர் கும்ப மரியாதை தீப ஆராதனை செய்து வரவேற்றனர்.

வைகை ஆற்றில் இறங்கினார்

வட்டபிள்ளையார் கோவிலில் இருந்து ஜெனகநாராயணபெருமாள் வெள்ளை குதிரை வாகனத்தில் பச்சைபட்டு உடுத்தி கள்ளழகர் அலங்காரத்தில் வைகை ஆற்றில் இறங்கினார். 20-க்கும் மேற்பட்டவர்கள் தண்ணீர் பீய்ச்சி கள்ளழகரை வரவேற்றனர்.ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் வைகை ஆற்றில் கள்ளழகர் மிதந்து வந்தார்.பேரூராட்சி மன்றதலைவர் ஜெயராமன், வார்டு கவுன்சிலர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கோவிந்தா, கோவிந்தா என்று பக்தி கோஷமிட்டனர். 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு முடி காணிக்கை செலுத்தினார்கள்.

வைகை ஆற்றின் மேற்கு பகுதியில் உள்ள உபயதாரர் சப்தகிரி நாதன் என்ற சத்து முதலியார் மண்டகப்படியில் எழுந்தருளி அன்று மாலை வரை பக்தர்களுக்கு அருள்பாலித்தார். துணை சூப்பிரண்டு பாலசுந்தரம், இன்ஸ்பெக்டர் சிவபாலன் உள்பட 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

சோழவந்தான் பேரூராட்சி சார்பாக சுகாதாரப் பணி, குடிநீர் வசதி ஏற்பாடு செய்திருந்தனர், வழி நெடுக சுவாமியை வரவேற்று அன்னதானம், பல்வேறு அமைப்புகளில் இருந்து நீர் மோர் வழங்கினார்கள்.

தசாவதாரம்

நேற்று மாலை வைகை ஆற்றில் இருந்து கருட வாகனத்தில் சுவாமி புறப்பட்டு பேட்டை, முதலியார்கோட்டை, சங்கங்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு சென்று இரட்டை அக்ரஹாரத்தில் சந்தான கோபாலகிருஷ்ணன் கோவில் முன்பாக உள்ள மண்டகப்படிக்கு வந்து சேர்ந்தது.

இன்று (சனிக்கிழமை)இரவு யாதவர்கள் சங்கத்தின் சார்பாக விடிய, விடிய தசாவதாரம் நடைபெறும்.நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு சனீஸ்வரன்கோவில் முன்பாக முதலியார் கோட்டை கிராமமக்கள் சார்பாக பூப்பல்லக்கில் சுவாமி எழுந்தருளி வீதி உலா நடைபெற்று கோவிலை வந்தடையும். அங்கு சிறப்பு பூஜை நடைபெறும்.


Related Tags :
Next Story