நகை-பணம் திருட்டு


நகை-பணம் திருட்டு
x

வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் திருட்டு

திருநெல்வேலி

நெல்லை அருகே உள்ள ரெட்டியார்பட்டி பாலாஜிநகரைச் சேர்ந்தவர் வரதராஜன் (வயது 61). இவர் கடந்த வாரம் குடும்பத்துடன் சென்னை சென்றார். இதனால் அவரது வீட்டை அதே பகுதியில் வசித்து வரும் அவருடைய சகோதரி சுப்புலட்சுமி என்பவர் பராமரித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை சுப்புலட்சுமி மின்விளக்கு போடுவதற்காக வரதராஜன் வீட்டுக்கு சென்றார். அப்போது கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 2 பவுன் தங்க நகை மற்றும் ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த பெருமாள்புரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு நகை-பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை வலைவீசி ேதடி வருகிறார்கள்.


Next Story