செஞ்சி அருகே 2 வீடுகளில் நகை-பணம் திருட்டு


செஞ்சி அருகே 2 வீடுகளில் நகை-பணம் திருட்டு
x
தினத்தந்தி 22 Dec 2022 12:15 AM IST (Updated: 22 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

செஞ்சி அருகே 2 வீடுகளில் நகை, பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.

விழுப்புரம்

செஞ்சி,

செஞ்சி அருகே உள்ள காமகரம் கிராமத்தை சேர்ந்தவர் குமரவேல் (வயது 32). இவர் செஞ்சி வருவாய்த்துறை அலுவலகத்தில் ஊழியராக பணி புரிந்து வருகிறார். இவருடைய மனைவி திண்டிவனம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஊழியராக பணி புரிந்து வருகிறார். கணவன்-மனைவி இருவரும் சொந்த ஊரில் உள்ள வீட்டை பூட்டிவிட்டு, திண்டிவனம் பகுதியில் தங்கி, தினமும் வேலைக்கு சென்று வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு மர்ம நபர்கள் குமரவேல் வீட்டின் முன்பக்க கதவு பூட்டை உடைத்து, உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 1½ பவுன் நகைகளை திருடி சென்றுள்ளனர். இதேபோல் அதேஊரை சேர்ந்த குமார்(39) என்பவருக்கு சொந்தமான வீட்டுக்குள் நள்ளிரவில் புகுந்த மர்மநபர்கள், பீரோவில் வைத்திருந்த ரூ.15 ஆயிரம் ரொக்கம் மற்றும் 300 கிராம் வெள்ளி பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து நல்லாண்பிள்ளைபெற்றாள் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஒரேநாளில் அடுத்தடுத்து 2 வீடுகளில் நகை, பணம் திருடு போன சம்பவம் அக்கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story